தமிழ் சினிமாவின் இளைய தலைமுறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, இப்படத்தின் வெற்றியால் ‘ஜெயம் ரவி’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி, அண்ணனான மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முத்திரையை பதித்தனர்.
கடைசியாக ‘பூமி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் ‘அகிலன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் அகமது இயக்கத்திலும் மற்றும் இயக்குனர் எம். ராஜேஷ் உள்ளிட்டோரின் படத்திலும் பிஸியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து ‘அகிலன்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது 19 வருடகாலத்தின் திரைப்பயணத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி. அதில் “எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. என்னுடைய முதல் படமான ஜெயம் படத்துக்காக கேமராவை எதிர்கொண்டது நினைவிருக்கிறது. இது ஒரு மேஜிக் போல உள்ளது. என்னுடைய திரை பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர்.எனது ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டும் இல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதில் நிறைய பொறுப்புகளை வழங்கியுள்ளன. எனது சிறந்த படைப்புகளை பாராட்ட தவறாத அதே நேரத்தில் அவர்களின் நேர் மறையான விமர்சனங்களால் எனது வாழ்க்கையை மேம்படுத்த உதவிய பத்திரிக்கை ஊடக சகோதரர்கள் மற்றும் சமூக ஊடகத்துறையில் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு, சிறந்த படைப்புக்களை கொடுப்பதற்கான பொறுப்புக்களை என்னுள் விதைத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
#19YearsOfJayamravi 🙏🏼 pic.twitter.com/Obp9xerd89
— Jayam Ravi (@actor_jayamravi) June 21, 2022