30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஒரு வழியாக AK 61 படத்தை பற்றி வெளியான புதிய அப்டேட் !! எதிர்பார்ப்பில் அஜித்...

ஒரு வழியாக AK 61 படத்தை பற்றி வெளியான புதிய அப்டேட் !! எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அல்டிமேட் ஸ்டாரின் 61வது படத்திற்காக அஜித்குமார் – எச் வினோத் – போனி கபூர் ஆகியோரின் டைனமிக் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. தற்காலிகமாக ‘AK61’ என்று பெயரிடப்பட்டுள்ளது, வரவிருக்கும் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் சிறிது நேரம் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அஜித்தின் 61வது படம் தயாரிப்பில் உள்ளது, பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார். இப்போது, ​​’ஏகே 61′ ஒரு பான்-இந்தியன் வெளியீடாக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அஜித்தின் கடைசி படமான ‘வலிமை’ பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் தற்போது அவர்கள் கொண்டாட சரியான காரணம் ஒன்று இருக்கிறது. ஆம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

காரணம் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று.போனி கபூர் கொஞ்சம் சென்டிமெண்டான நபர் என்பதை நாம் அறிவோம். வலிமை படம் ஸ்ரீதேவியின் நினைவு நாளில் தான் ரிலீஸ் ஆனது.

இதனால் அஜித் ரசிகர்கள் பண்டிகையை கொண்டாடுங்கலே மோடில் உள்ளனர்.

இந்த நிலையில் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும் அஜித் தன்னுடிய கார்டை கொடுத்து பணம் செலுத்துகிறார். அஜித்தை அடையாளம் காணும் அந்தக்கடை கேஷியர் அஜித்துக்கு கைகொடுத்து நலம் விசாரிக்கிறார். பின்னர் அஜித் திருப்பி நடக்கபார்க்கிறார். அப்போது எதிரே வந்த பெண்ணுக்கு இடைஞ்சலாக இருந்துவிட்டதாக நினைத்து சாரி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பைக் ரேஸர் உடையிலும், ஐரோப்பிய நாடுகளில் டிசர்ட்டிலும் அஜீத் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அஜீத் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்தடுத்து அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துப்பாக்கிச்சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, பைக் ரேஸ் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதேசமயத்தில் ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் நடித்த பிறகு அஜீத்குமார் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதேசமயம் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய கதைகள்