28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஇணையத்தில் படு வைரலாகும் ‘AK 61’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !

இணையத்தில் படு வைரலாகும் ‘AK 61’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அல்டிமேட் ஸ்டாரின் 61வது படத்திற்காக அஜித்குமார் – எச் வினோத் – போனி கபூர் ஆகியோரின் டைனமிக் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. தற்காலிகமாக ‘AK61’ என்று பெயரிடப்பட்டுள்ளது, வரவிருக்கும் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் சிறிது நேரம் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பா பயணத்தை அஜித் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். ஆனால் இனிமேல் எடுக்கப்போகும் காட்சிகளில் அஜித் வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். அதற்கான தன் கெட்டப்பை அஜித் மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஹித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் H வினோத். இந்நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.

மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மற்றும் மகாநதி சங்கர் ஆகியோரும் அஜித் நடிக்கும் ‘ஏகே61’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் காத்திருக்கிறது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய கதைகள்