28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாமுழுசா கணவர் இறந்த ஒரு வாரத்தில் படப்பிடிப்பிற்கு சென்றாரா மீனா? சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்

முழுசா கணவர் இறந்த ஒரு வாரத்தில் படப்பிடிப்பிற்கு சென்றாரா மீனா? சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நடிகை மீனாவின் கணவர், வித்யாசாகர் உயிரிழந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் மீனா குறித்து பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர்கள் அனைவருமே முன்னணி நடிகையாக வலம்வருவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே அனைவராலும் ரசிக்கப்படும் கதாநாயகியாக மாறுகிறார்கள் அந்த பட்டியலில் இடம்பிடித்தவர் நடிகை மீனா.

meena husband

ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா, வித்யாசாகர் என்பவரை பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில வருடங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்படவே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து, கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார்.

மீனாவின் கணவர் உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலிக்கு செலுத்தினர். மேலும் மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள், மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.இப்படி இருக்க தற்போது மீனா பற்றி சமூக வலைதளத்தில் தீயாக சில வதந்திகள் பரவி வருகிறது.

மீனாவின் கணவர் இறந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில், மீனா மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக கூறி… கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட இவருடைய பழைய விளம்பர படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர்.

ஆனால் இது உண்மையில், இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதனை மீனாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மீனா எவ்வித வதந்திகளையும் பரப்பாதீர்கள் என, சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டு தெரிவித்த போதிலும் சிலர் இப்படி நடந்து கொள்வது அதிருப்திர்யை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய கதைகள்