30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாயாருக்கும் தெரியாமல் விஜய்யும் அஜித்தும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துக்கொள்ளும் இடம் இது தான் !!...

யாருக்கும் தெரியாமல் விஜய்யும் அஜித்தும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துக்கொள்ளும் இடம் இது தான் !! புதிய அணுகுண்டை தூக்கி போட்ட கங்கை அமரன்.

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜீத் மற்றும் விஜய் கடைசியாக 2014 பொங்கலின் போது அந்தந்த படங்களான வீரம் மற்றும் ‘ஜில்லா’ ஒரே தேதியில் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தன .

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வெங்கட்பிரபு அவர்கள் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் விஜய், அஜித்தை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்க உள்ள தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்து கொண்டு இருக்கிறது.

அதாவது, மோகன் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அஜித்குமாரின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருந்தார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் அஜித்-விஜய் இருவருடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் எல்லாம் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. மேலும், மங்காத்தா படம் வெளிவந்த போது படத்தை பார்த்த விஜய் அவர்கள் இந்த படத்தின் கதையை சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே என்று கேட்டிருந்தார்.

அதேபோல் அஜித், விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த தகவலும், புகைப்படமும் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் அவர்கள் விஜய்- அஜித் இணைந்து நடிக்கும் படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, மங்காத்தா படத்தின் போதே விஜய்யிடம் வெங்கட் பிரபு படம் பண்ணுவது பற்றி பேசியிருந்தார். வெங்கட்பிரபுவும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விஜய்- அஜித் இருவரையும் வைத்து இயக்கும் ஒரு புதிய கதையை வெங்கட் பிரபு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படம் கண்டிப்பாக பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய்-அஜித் இருவரும் நல்ல நண்பர்கள்.

இரு குடும்பமும் யாருக்கும் தெரியாமல் துபாயில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். வெளியுலகில் தான் அஜித்-விஜய் இருவரையும் எதிரிகளாக காண்பிக்கிறார்கள். ஆனால், இரு குடும்பங்களும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி கங்கை அமரன் அளித்த பேட்டியின் மூலம் கூடிய விரைவில் அஜித்- விஜய் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்