27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாதமிழ் திரையுலகில் அஜித்தை இம்ரஸ் செய்த வில்லன் நடிகர் யார் தெரியுமா ?நீங்களே பாருங்க

தமிழ் திரையுலகில் அஜித்தை இம்ரஸ் செய்த வில்லன் நடிகர் யார் தெரியுமா ?நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

எச்.வினோத்தை வைத்து தற்காலிகமாக ‘ஏகே 61’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அஜித், விரைவில் விக்னேஷ் சிவனை வைத்து ‘ஏகே 62’ படத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார். இதற்கிடையில், காயத்ரியும் புஷ்கரும் தற்போது ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகாலமாக 60 படங்களில் நடித்துள்ள அஜித், பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து ரசிகர்களின் மனதில் அல்டிமேட் நடிகராக இருக்கிறார்.

இருப்பினும் சினிமாவின் படிப்படியாக முன்னேறிய அஜித், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் பள்ளி மாணவராக சிறு வேடத்தில் நடிப்பை துவங்கி, அதன் பிறகு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் 1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

பிறகு பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஜித்துக்கு, 1995ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படத்தில் ஜீவானந்தம் ஆக நடித்ததுதான் அவர் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக அமைந்தது.

அந்த படத்தில் அவர் ரொம்ப ரொம்ப ஜூனியர். அவரைவிட பிரகாஷ்ராஜ் சீனியர். ‘நான் சினிமாவில் வளர்ந்து விடுவேனா?’ என்று அந்தப் படத்தின் சூட்டிங் நேரத்தில் அடிக்கடி அஜித், பிரகாஷ் ராஜிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.

‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று பிரகாஷ்ராஜ் அவரைத் தேற்றுவாராம். ஆனால் அந்த படத்தில் அஜித்தை விட நல்ல நடித்தது பிரகாஷ்ராஜ் தான். ஆனால் அஜித்தை விட சிறப்பாக நடிக்கிறேன் என்ற, எந்த ஒரு கெத்தும் காட்டாமல் அஜித்துக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர் துவண்டு போனபோது தேற்றி அவரை வளர்த்து விட்டார்.

அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன அஜித், பிற்காலத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த மங்காத்தா படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்த வாலி போன்ற படங்கள் நடிப்பதற்கு அது தான் காரணம் என்று கூறினார்.

அஜித்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் அவரும் அவரது மனைவி காயத்ரியும் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் இயக்குனர் புஷ்கர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான வேறு எந்த தகவலையும் இயக்குனர் வெளியிடவில்லை.

சமீபத்திய கதைகள்