28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஇந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவரா ? மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா நீங்களே...

இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவரா ? மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘இந்தியன் 2’ படத்திற்கான பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார்

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இயற்கை எய்தியுள்ளனர். நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியன் 2 படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகக் நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இது சம்மந்தமாக இருவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தனது திரைவாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்த சத்யராஜ் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரின் பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். கமலுடன் அவர் நடித்த காக்கி சட்டை படத்தில் இடம்பெற்ற தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்தியன் 2 படத்தில் நடிக்க சத்யராஜ் சம்மதித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும்.

ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ 1996 இல் வெளியான இயக்குனரின் சொந்தப் படமான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாகும். சமூக நாடகம் அதன் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கமல்ஹாசன் சேனாதிபதியாக மீண்டும் வருவார்.

சமீபத்திய கதைகள்