28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஉடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பிரபல நடிகர் திடீர் மரணம்!! முதல்வர்...

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பிரபல நடிகர் திடீர் மரணம்!! முதல்வர் இரங்கல்!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

பிரபல மராத்தி மற்றும் இந்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. 1991-ம் ஆண்டு வெளியான ‘ஏக் ஃபுல் சார் ஹாஃப்’ என்ற மராத்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் பிரதீப் பட்வர்தன்.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் லைன், சஷ்மே பஹதர், ஏக் ஷோத், மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்டோய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.மராத்தி நாடகமான ‘மொருச்சி மவாஷி’யில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மாவுடன் பாம்பே வெல்வெட் இந்தி படத்திலும் நடித்து இருக்கிறார். பிரதீப் பட்வர்தன் மும்பையில் உள்ள கிர்கானில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் பட்வர்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பிரதீப் பட்வர்தன் மரணம் அடைந்தார்.

பிரதீப் பட்வர்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மராத்தி சினிமா ஒரு சிறந்த கலைஞரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்தி நடிகர்-நடிகைகளும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மறைந்த பிரதீப் பட்வர்தனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சமீபத்திய கதைகள்