அஜித் தனது 61வது படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார், மேலும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61′ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ’அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.இந்நிலையில்தான், தனக்கு வந்த ரீமேக் வாய்ப்பை நிராகரித்துள்ளார் அஜித் என்பது தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்மில்லாத தகவலின்படி, மஃப்டி ரீமேக்கில் அஜித்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. அவரிடம் கேட்டபோது ஏற்கனவே ஹிந்தி ரீமேக்கான பிங்க் – நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்ததால், அஜித் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தமிழில் சிம்பு நடிக்க பத்து தல எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ள சிம்பு, விரைவில் பத்து தல படப்பிடிப்பில் இணைந்து கொள்வார். வெந்து தணிந்து காடு திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்கும் சிம்பு, விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்கவிருக்கிறார்.
பத்து தல படக்குழுவும் விரைவில் படத்தை முடிக்க துரிதமாக வேலை செய்துவருகிறது. சிம்பு போர்சன் தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாம். இதனால் நிச்சயமாக படம் டிசம்பரில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் இந்த படம் அஜித் நடிக்கவேண்டியது, இப்போது சிம்பு நடிக்கிறார் என கூறியுள்ளது நமக்கு கிடைத்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
‘அஜித் 61’ முதலில் 2022 தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் படத்தை பிற்பட்ட தேதிக்குத் தள்ளியுள்ளது, மேலும் படம் டிசம்பரில் வெளியாகலாம்.