30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeஆரோக்கியம்சூடான சீஸ் ஆம்லெட் ! செய்வது எப்படி பாருங்க

சூடான சீஸ் ஆம்லெட் ! செய்வது எப்படி பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்கனுமா இத போலோ...

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர்....

உங்க உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கா இத...

உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு...

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு...

2023 இல் ஆயுர்வேதத்தின்படி சரியாக சாப்பிடுவதற்கான உங்கள் வழிகாட்டி

ஆயுர்வேதத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று, எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக...

மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் ஏற்படும்...

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால்...

தற்போது அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை ஒவ்வொரு வகையில் சமைத்து உண்பார்கள். மேலும் முட்டை வருவல் , முட்டை தோசை, முட்டை பணியாரம், சீஸ் ஆம்லெட் போன்றவைகள் செய்யலாம் அந்த வகையில் இன்று சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :எட்டு முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு வெங்காயம் தேவையான அளவு நான்கு தக்காளி , இரண்டு பச்சை மிளகாய் , நான்கு சீஸ் , எண்ணெய்தேவையான அளவு மிளகுத் தூள்தேவையான அளவு உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :சீஸ் ஆம்லெட் செய்வதற்கு முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, முட்டையுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தவாவை சூடாக்கி பரவலாக எண்ணெய் தடவி முட்டைக் கலவையை அதில் ஊற்றி, மூடி போட்டு மெல்லிய தீயில் வைத்து வேக விட வேண்டும்.

ஆம்லெட் வெந்த பிறகு அதன் ஒரு பாதியில் மட்டும் நறுக்கிய சீஸை பரவலாக தூவி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.அதன் பிறகு சீஸ் உருகியதும் மறு பாதியால் மூடவும். சுவையான சீஸ் ஆம்லெட் ரெடி. தேவைக்கேற்ப துண்டுகள் போட்டு கொள்ளலாம்.

சமீபத்திய கதைகள்