உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் மூன்று நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட 150 ஸ்டால்கள் உள்ளன. உணவு வீணாவதை தடுக்கும் முறைகள் மற்றும் எந்த வகையான உணவுகளை உண்பது ஆரோக்கியமானது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படுகிறது.
இந்த விழாவில் பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய உணவுகள், சமையல் போட்டிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட உள்ளது.