28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஅஜித்தை சந்திப்பாரா விஜய் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!

அஜித்தை சந்திப்பாரா விஜய் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜித் தனது 61வது படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார், மேலும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்ற அதே இடத்தில் அஜித் நாளை முதல் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது என்பதும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த இந்த படப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் திரும்பியுள்ள நிலையில் தற்போது அதே விசாகப்பட்டினத்தில் நாளை முதல் அஜித் நடித்துவரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மொத்தமாக பாக்கி உள்ளது என்றும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் டிசம்பரில் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளை படப்பிடிப்பில் நாயகி மஞ்சுவாரியரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தை எச் வினோத் பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

‘அஜித் 61’ முதலில் 2022 தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் படத்தை பிற்பட்ட தேதிக்குத் தள்ளியுள்ளது, மேலும் படம் டிசம்பரில் வெளியாகலாம்.

சமீபத்திய கதைகள்