தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த நாளில் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசிய கொடியை தடுமாறி ஏற்றினார்.
ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில தினங்களாகவே சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனால் அடிக்கடி சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்வதும், அல்லது சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், தான் 75வது சுதந்திர தினத்திற்கு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்படவும், தொண்டர்கள் உற்சாகமானார்கள். அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள், அப்படியே ஒரு கணம் உறைந்து போய்விட்டனர். குழந்தைப்போல என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க தொண்டர்கள் கண் கலங்கினார்கள்.
உடனே மனைவி பிரேம லதா கண்ணாடியை போட்டுவிட்டார். மேலும், விஜயகாந்த்தால் நேராக, நிமிர்ந்து உட்காரமுடியவில்லை..
கடைசிவரை அவரை கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டேதான் நின்றார் பிரேமலதா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கொந்தளித்துவிட்டனர். அவரை ஏன் படாத பாடு படுத்துகிறீர்கள் என திட்டி தீர்க்கின்றனர்.
பழைய பன்னீர் செல்வம்? 💔💔😭😭
pic.twitter.com/9skgszZQtX— ✨ டிக்.டிக்.யாரது?🤫💙 (@Ilavarasu14) August 15, 2022