28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஅமிதாப், ஷாரூக், நாகர்ஜூனா, ரன்பீர் கபூர் நடித்த "பிரம்மாஸ்திரம் "படத்தின் முழு விமர்சனம் இதோ !!

அமிதாப், ஷாரூக், நாகர்ஜூனா, ரன்பீர் கபூர் நடித்த “பிரம்மாஸ்திரம் “படத்தின் முழு விமர்சனம் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள பிரம்மாஸ்திரா இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தது. அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கதை: ஒரு பப்பில் டிஜே ப்ளேயரான ஷிவா(ரன்பீர் கபூர்) முதல் பார்வையிலேயே இஷா(ஆலியா பட்) மீது விழுகிறார். இறுதியில், அவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது மற்றும் இணையாக, அக்னியாஸ்திரத்துடன் சிவனின் தொடர்பு நெருப்பின் ஒரு கூறு காட்டப்படும். சிவனுக்கு ஏன் நெருப்பில் இவ்வளவு பற்று? அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் ஷாருக்கான் நடித்த பிரமன்ஷ் பாதுகாவலர்களான குருஜி, அனிஷ் மற்றும் விஞ்ஞானி பாத்திரங்கள் சிவனின் கடந்த காலத்துடன் எவ்வாறு தொடர்புடையது? முறையே பிரபாஸ்த்ரா, நந்தி அஸ்திரம் மற்றும் வானராஷ்டிரா ஆகியவற்றின் பராமரிப்பாளர்களாக இருப்பதால், இந்த மூவரும் சிவனுக்கு எப்படி அவரது பெற்றோர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவுவார்கள் என்பது பிரம்மாஸ்திரத்தின் முதல் பகுதியின் முக்கிய யூ.எஸ்.பி.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் தானோஸுக்கு அத்தனை சக்தி கல் கிடைத்ததும் உலக மக்கள் தொகையில் பாதியை ஒரு சொடுக்கில் காலி செய்வது போல, ரயா தி லாஸ்ட் டிராகன் அனிமேஷன் படத்தில் எப்படி உடைந்து போன டிராகன் சக்தியின் ஒவ்வொரு துண்டையும் ஒன்றாக ஒட்ட வைத்து சூறாவளியை அழிக்கின்றனரோ அதே போன்ற ஒரு கதை தான் பிரம்மாஸ்திரம் படத்தின் கதையும்.

டிஜே ஷிவாவாக ஜாலியான பையனாக இருந்து வரும் ரன்பீர் கபூர் இஷா எனும் ஆலியா பட்டை பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழ, அவனுக்குள் இருக்கும் அந்த அக்னி சக்தி வெளிப்படுகிறது. அதன் பின்னர், தனக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சியும், தீய சக்திகளிடம் இருந்து தன்னையும் தனது காதலியையும் அந்த பிரம்மாஸ்திரத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதை 2.50 நிமிடம் சொல்லி உள்ளனர். (இது முதல் பாகம் தான்)

ஷிவா ஷிவா என மூச்சுக்கு 300 முறை ஆலியா பட் கொடுக்கும் லவ் டார்ச்சர்களை பார்த்து முதல் பாகத்தில் அனைவரும் வெளியே இடைவேளைக்கு முன்பே இண்டர்வெல் விட கிளம்பி விட்டனர். ஆனால், அவர்களை மீண்டும் சீட்டுக்கு கொண்டு வருவதே இடை வேளைக்கு முன்பு வரும் அந்த மிரட்டலான கார் சேஸிங் சீன் தான். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அப்படியொரு காட்சி படம் பார்க்க சென்றவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. (வாண்டா) மெளனி ராய் ரன்பீர் கபூரையும் ஆலிய பட்டையும் துரத்த அங்கிருந்து தப்பித்து இமய மலையில் உள்ள அமிதாப் பச்சனிடம் வந்து தஞ்சம் அடைவதோடு ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிகிறது.

அமிதாப் பச்சன் அஸ்திரங்கள் என்றால் என்ன, ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் என்ன சக்தி, நீயே ஒரு அக்னி அஸ்திரம் தான். உடைந்து 3 துண்டுகளாக ஒவ்வொரு இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த 3 பாகங்களையும் ஒன்றாக இணைத்து விட்டால் பிரம்மாஸ்திரம் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தையே ஜுனூன் (மெளனி ராய்க்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம்) அழித்து விடுவாள் என பெரிய லெக்சரே கொடுத்து ஒரு வழியாக்கி விடுகிறார்.

ஷாருக்கான் குறைவான நேரமே வந்தாலும் அவரது காட்சிகள் படத்திற்கு ரசிகர்களை வரவழைக்கும். நாக சைதன்யாவுக்கு அமீர்கான் படத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை விட காளை சக்தியுடன் மிரட்டலாக எதிரிகளை பந்தாடும் நாகர்ஜுனாவின் போர்ஷன் மிரட்டுகிறது. பிரம்மாஸ்திரத்தை விட உலகில் பெரிய அஸ்திரம் காதல் தான் என்கிற கரு நன்றாகவே உள்ளது. முதல் பாகத்தில் ஷிவா உள்ள நிலையில், இரண்டாம் பாகத்தில் தேவ் ஆக அஜய் தேவ்கன் வரப் போகிறாரா? சல்மான் கான் வரப்போகிறாரா? என்கிற கேள்விகள் ரசிகர்களை சற்றே ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் ப்ரீத்தமின் பின்னணி இசை சூப்பர். மார்வெல் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு VFX மிரட்டலாகவே உள்ளது. சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் உள்ளன.

ஆனால், இயக்குநர் எங்கே சறுக்குகிறார் என்று பார்த்தால், திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதும் இடத்தில் தான். பல ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களை நம்ம ஊர் மைதாலஜியுடன் சேர்த்து சொல்கிறேன் என மொக்கைப் போட்டுள்ளார். குழந்தைகளையாவது படம் கவரும் என்று பார்த்தால், காதல் காட்சிகளை வைத்து ரம்பம் போட்டுள்ளார். தேவா தேவா என்கிற ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களை தூக்கி இருக்கலாம். சில சூப்பரான காட்சிகள் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தையும் காப்பாற்ற அது உதவவில்லை. கோப்ரா படத்தை போல 20 நிமிடத்தை கட் செய்தால் கொஞ்சம் தப்பிக்கும்!

முதல் பாதியில் எக்ஸிகியூஷன் பகுதி நல்ல இடைவேளை சீக்வென்ஸுடன் கண்ணியமாக இருந்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் அவசரமான நடவடிக்கைகளுடன் ஓடுகிறது மற்றும் திடீரென்று காட்சிகளை விவரிக்கிறது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் துப்பு இல்லாத படத்தைப் பார்ப்பதாக உணருவதால், படத்தின் இயக்க நேரமும் படத்திற்கு ஒரு குறைபாடு.


கோடைகாலத்திற்கு, பிரம்மாஸ்திரா ஒரு கற்பனை சாகசமாகும், இது ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கொண்டிருந்தது, ஆனால் பலவீனமான எழுத்து மற்றும் ஈடுபாடற்ற திரைக்கதையால் நீர்த்தப்பட்டது. VFX-ன் அதிகப்படியான உபயோகத்தில் நேரத்தை வீணடிக்காமல் காட்சி ஒழுங்கு மற்றும் இயக்கத்தில் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால், விளைவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சமீபத்திய கதைகள்