27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஅந்த அளவுக்கு சொல்லியும் அட்லீக்கு நோ சொன்ன தளபதி விஜய் !! நடந்தது என்ன ...

அந்த அளவுக்கு சொல்லியும் அட்லீக்கு நோ சொன்ன தளபதி விஜய் !! நடந்தது என்ன ?

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, கிங் கான் 2023-ல் ஆக்‌ஷன் நிரம்பிய படத்திற்காக காத்திருக்கிறார். ஷாருக்கானுக்கு 2023-ல் வெளிவருவது ஒன்றல்ல மூன்று படங்கள். அவற்றில் அட்லீயின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ஜவான்’.

தற்பொழுது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி இதை முடித்துவிட்டு மீண்டும் விஜயுடன் நான்காவது முறையாக புதிய படம் ஒன்று கமிடாகியுள்ளார். அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு மிகவும் விருப்பமான நம்பிக்கைகூறிய இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். மற்ற இயக்குனர்களை விட விஜயுடன் மிக நெருக்கமாக இருக்கும் இயக்குனர் அட்லி உரிமையுடன் விஜய்யை அண்ணன் என்பதும், அதேபோன்று விஜய் தன்னுடைய தம்பி என்று அட்லீயை அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் அதிகம்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக, நயன்தாரா கதாநாயகி நடிக்கின்றார். தான் இயக்கும் ஜவான் படத்தில் விஜய் ஒரு சில காட்சிகளில் நடித்தால், அந்த படத்திற்கு மேலும் பிரமோஷன் அதிகரிக்கும், அதனால் படம் நிச்சயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று திட்டமிட்டுள்ளார் அட்லீ.

இதனை தொடர்ந்து ஜவான் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ஷாருகாகனிடம், ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலாக வருவது குறித்து பேசி உள்ளார், அதற்கு ஷாருகான் எந்த ஒரு ஆட்சேபனமும் தெரிவிக்கவில்லை, மேலும் விஜய் நடிப்பது ஜவான் படத்திற்கு மேலும் கூடுதல் பலம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் ஒப்புகொள்வாரா என்று ஷாருக்கான் கேட்க, அண்ணன் நான் கேட்டுக் கொண்டால் நிச்சயம் ஒப்புக் கொள்வார் என அட்லீ தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் இது குறித்து அட்லீ ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு விஜய் கெஸ்ட் ரோல் நமக்கு சரிப்பட்டு வராது, மேலும் மும்பை படப்பிடிப்பில் கலந்து கொள்வது மிகவும் சிரமம். அதனால் முடியாது என்று விஜய் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மறுத்தும், சென்னையில் படபிடிப்பு நடத்தினால் நிச்சயம் விஜய் கலந்து கொள்வார் என்று ஷாருக்கானிடம் தெரிவித்துள்ளார் அட்லீ.

இந்நிலையில் ஜவான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அட்லி. தற்பொழுது சென்னையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மீண்டும் விஜயை சந்தித்து ஒரு நாள் கால் சீட் மட்டும் கொடுத்தால் போதும், உங்கள் வசதிக்காக தான் ஜவான் படத்தின் படப்பிடிப்பை மும்பையில் இருந்து சென்னை மாற்றப்பட்டுள்ளது என அட்லீ தெரிவித்துள்ளார்.

மேலும் ஷாருக்கானிடம் உறுதியாக நீங்கள் இந்த படத்தில் நடிப்பீர்கள் என்று உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியளித்துள்ளேன் என அட்லி தெரிவிக்க, உடனே டென்ஷனான விஜய், யாரை கேட்டு இதுபோன்று செய்தீர்கள்.? நான் ஏதாவது உறுதி கொடுத்தேனா.? மேலும் ஏற்கனவே என்னுடைய தந்தை இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன் படத்தில் கெஸ்ட்ரோலாக நடித்து அது என்னுடைய இமேஜை டேமேஜ் செய்தது.

அதனால் நான் கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய சம்மதம் இல்லாமல் அதிகபிரசங்கி தானமாக ஏதும் செய்ய வேண்டாம் என கடுமையாக அட்லீயை எச்சரித்து விஜய் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பது உறுதியானதால், மும்பையில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை விஜய்க்காக சென்னைக்கு மாற்றிய அட்லீ மீது செம்ம கடுப்பில் ஷாருக்கான் இருப்பதாக கூறப்படுகிறது.

‘ஜவான்’ படம் இந்தியா முழுவதும் வெளியாகும். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இத்திரைப்படத்தை கான் மற்றும் அவரது மனைவி கௌரி அவர்களின் சொந்த தயாரிப்பான ரெட் சில்லிஸ் மூலம் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்த படத்தில் டைகர் ஷெராஃப், சோனம் கபூர், அஜய் தேவ்கன், கிருத்தி கர்பண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் சில கேமியோ தோற்றங்களில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்திய கதைகள்