கோலிவுட் நட்சத்திர ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அக்டோபர் 10 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பினர். இன்ஸ்டாகிராமில், விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் இப்போது புதிதாகப் பிறந்த இரண்டு இரட்டை ஆண்களுக்கு பெற்றோராகிவிட்டதாக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் அறிவித்தார். இந்த ஜோடி வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்தது மற்றும் விக்னேஷ் சிவன் தனது இரண்டு மகன்களுக்கும் அனைத்து அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டார். இப்போது தம்பதியினர் குழந்தைகளுக்கு உயிர் என்றும் உலகம் என்றும் உயிர் மற்றும் உலகம் என்று உருவகமாக பெயரிட்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து வந்த நயன், கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் நேற்று நயன் தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரெட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டதாக புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.
இந்த விசயம் தற்போது விதுமுறைகளின் படி நடக்கவில்லை என்று சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், இதை சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானிடம் இருந்து நயன் தாரா கற்றுக்கொண்டாரா என்று கேள்வி எழுந்து வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 2013 ஆம் ஆண்டு தன்னுடைய மூன்றாவது குழந்தை ஆப்ராம் கானை வாடகைத்தாய் மூலம் பெற்றுகொண்டார்.
நயன் தாரா அவருடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அப்படி கிடைக்கும் இடையில் தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய பிரேக் எடுத்துக்கொண்டார். இடையில் கணவருடன் நேரத்தை செலவிட ஷூட்டிங்கிற்கு லீவ் போட்டுவிட்டு தான் வருவார்.
அந்த சமயத்தில் திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் கூட ஷாருக்கான் கூறியிருந்ததாகவும் அதில் ஒன்றாக வாடகைத்தாய் இருக்கலாம் என்று வதந்தி செய்திகளாக இணையத்தில் உலா வருகிறது.