அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக பாங்காக்கில் நடந்து முடிந்துள்ளது. பாவ்னி, அமீர், சிபி சந்திரன் மற்றும் பலர் நடித்த மற்ற நடிகர்களுடன் சேர்ந்து அஜித் நிறைய அதிரடி காட்சிகளை படமாக்கினார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைய இருக்கிறார்.
இப்படி தொடர்ச்சியாக இருக்கும் நடிகர் அஜித்தை பற்றி ஒரு சிலர் நல்ல கருத்துக்களை முன்வைத்தாலும் ஒரு சிலர் அவரின் சுபாவங்களை வசை பாடுவதையே வேலையாக கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் அஜித்தை பற்றி கேள்வி பட்ட சில கெட்ட விஷயங்களால் அவர் கூட நடிப்பதையே தவிர்த்திருக்கிறார் முக்கியமான பிரபலம் ஒருவர்.
ஃமாபியா எப்படி யெல்லாம் வேலை பார்த்து இருக்கு ??
அஜித் சார் பற்றி தப்பான விஷயங்களா பரப்பிருக்காங்க !!
இதையெல்லாம் தாண்டி இன்னைக்கு கோலிவுட்ல ராஜாவா இருக்கார்னா கண்டிப்பா #Ajithkumar sir is Great 👍 👑#Thala #AK #Thunivu #ActorRahman sir !! pic.twitter.com/gRCU1h98Dt
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) October 12, 2022
அவர் வேறு யாருமில்லை. ஒரு காலத்தில் 80களில் கனவு நாயகனாக இருந்த ரஹ்மான் தான். இவர் தமிழ் சினிமாவில் நிலவே மலரே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 80களின் சூப்பர் ஸ்டாராகவே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 200படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
இவர் ஹீரோவாக கடைசியாக நடித்த வெற்றிப் படம் சங்கமம் திரைப்படம் ஆகும். அதன் பின் இவரை அந்த அளவுக்கு படங்களில் காண் முடியவில்லை. பிறகு தான் அஜித்தின் பில்லா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அஜித்தை பற்றி பத்திரிக்கையில் தப்பாக பேசியதை நம்பி பில்லா படத்தில் நடிக்க முடியாது என கூறினாராம். அதன் பின் இயக்குனர் அஜித் சார் அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னதன் பேரில் தான் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் பில்லா படத்திற்கு பிறகு அஜித்தை இப்பொழுது ரஹ்மானே பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார். நான் நினைத்தது தவறு என்று புரிந்து கொண்டேன் என்று கூறினார். மேலும் இவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த சில நாட்களில் சென்னையில் அதன் பேட்ச்வொர்க்குடன் படம் முடிந்து, அதன் பிறகு முழு படப்பிடிப்பும் முடிவடையும். துனிவு அதன் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித்துடன் ஹெச்.வினோத்தின் மூன்றாவது படம்.