தெற்கு கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் குடோனில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலை 6.41 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
தீயை அணைக்க குறைந்தது 13 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
டோலிகஞ்சில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாபுராம் கோஷ் சாலையில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.