அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வரிசு ஆகிய இரண்டு தமிழ் படங்களும் ஜனவரி, 2023 இல் பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்று சில காலமாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரு நாளில் வெளியாகிறது. தவிர.
ஜில்லா – வீரம் படத்துக்கு பிறகு நேரடி மோதலை இரு நடிகர்களும் தவிர்த்து வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே பெரிய போட்டிக்கு இருவரும் தயாராகி விட்டனர்.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்திற்கு முன்னதாகவே அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.பகவதி – வில்லன், பிரெண்ட்ஸ் – தீனா, திருமலை – ஆஞ்சனேயா, ஆதி – பரமசிவன், போக்கிரி – ஆழ்வார், ஜில்லா – வீரம் என இதுவரை அஜித் மற்றும் விஜய் நேரடியாக பல முறை மோதியுள்ளனர். இதில், பெரும்பாலும், ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இல்லை இருவரது படங்களும் சொதப்பிவிடும் இப்படித்தான் உள்ளது. இந்நிலையில், மீண்டும் வரும் பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் போட்டியாக வெளியாகின்றன.
பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் வெளியானது முதல் நாளில் நானே வருவேன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தன. அடுத்த நாளே அதன் ஃபிளாப் ரிசல்ட் காரணமாக தியேட்டர்கள் அப்படியே பொன்னியின் செல்வன் படத்துக்கு சென்றது. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு அஜித் – விஜய் படங்கள் மோத உள்ளதால் இருவருக்கும் தியேட்டர்கள் சரி சம அளவில் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொங்கலுக்கு நடிகர் விஜய் அஜித்துடன் மட்டுமில்லை தெலுங்கில் பிரபாஸ் உடனும் மோத காத்திருக்கிறார். ஜனவரி 12ம் தேதி பிரபாஸின் மெகா பட்ஜெட் 3டி படமான ஆதிபுருஷ் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை விஜய்யின் வாரிசு இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாண்டி வெல்லுமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
விஜய்யின் வாரிசு படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு படம் சில பல காரணங்களால் தள்ளிப் போன நிலையில், பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால், விஜய்யின் வாரிசு வெளியாவதற்கு முன்னதாகவே துணிவு வெளியாகிறது என்கின்றனர். வரும் ஜனவரி 12ம் தேதி வியாழன் கிழமை அஜித்தின் துணிவு படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
ஜனவரி 15ம் தேதியான வெள்ளிக்கிழமை விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்களே உறுதியான தகவலை அறிவித்து விட்டனர். தீபாவளிக்கு வெளியாக உள்ள அப்டேட்களில் அஜித்தின் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும், விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என தெரிகிறது.
அஜித்தின் துணிவு படம் ஜனவரி 12ம் தேதியே சோலோவாக தமிழ்நாட்டில் வெளியானால், வலிமை படத்தை போலவே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் துணிவு மற்றும் ஆதிபுருஷ் படங்களுடன் தியேட்டர் ஸ்க்ரீன்களை ஷேர் செய்து வெளியாகப் போகும் வாரிசு படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே வசூலை குவிக்கும் என கணித்து வருகின்றனர்.
#Thunivu Movie Smashed 50,000+ Interest On @bookmyshow App 🔥
Note : Movie Release Date Not Yet Announced Officially …
Just #Ajithkumar Things 😎🔥 pic.twitter.com/dTnmFxm0xW
— AJITH FANS COMMUNITY™ (@TFC_mass) October 18, 2022
இந்நிலையில் புக் மை ஷோ என்ற இணையத்தளத்தில் அதிக லைக்குகளை பெற்ற முதல் படம் என்ற பெருமையும் துணிவு படம் செய்துள்ளது
துனிவு ஒரு திருட்டு ஆக்ஷன் த்ரில்லர், இது சமீபத்தில் பாங்காக்கில் படப்பிடிப்பை முடித்தது. இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.