இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘ஏகே61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தெரிவித்திருந்தோம். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முன்பு தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது பிக் பாஸ் புகழ் அமீர் தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
இந்நிலையில் 5 ஸ்டார் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் மலையாளப்படங்களையும் ஒரு கை பார்த்தார். மம்முட்டி, சரத்குமாருடன் பழசிராஜா படத்தில் நடித்த அவர் பின்னர் திருமணமாகி அயல்நாட்டில் செட்டிலாகி இருந்தபோதும் அவ்வப்போது சில மலையாளப்படங்களில் முகம் காட்டினார்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ’ஓ காதல் கண்மணி’ படத்திலும் இப்படியான ஒரு சீனில் அவர் வந்துபோயிருந்தார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிகப்பில் உருவாகும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இவருக்கு ஒரு வெய்ட்டான ரோல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அஜித் பற்றி கனிகா கூறிய வீடியோ வைரலாகிறது இதோ !!
EXCLUSIVE :- 💫
Actress Kaniha Mam About #Ajith Sir & She Shares Her Work Experience Of VARALARU Movie ❤️.#Thunivu | #AjithKumar | #AK pic.twitter.com/S4xSvpu3dZ
— AK FANS UNIVERSE™ (@ThalaFansUniv) November 2, 2022
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.