27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஇணையத்தை தெறிக்க விட தயாரான துணிவு படத்தின் பாடல் & தீம் மியுசிக் பற்றிய ...

இணையத்தை தெறிக்க விட தயாரான துணிவு படத்தின் பாடல் & தீம் மியுசிக் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு ‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தெரிவித்திருந்தோம். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முன்பு தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது பிக் பாஸ் புகழ் அமீர் தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்காக ஒரு ப்ரமோஷன் பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு திரைப்படம் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது ரசிகர்கள் அறிந்ததே. அதனால் படத்தின் ப்ரமோஷனுக்காக பக்காவான மாஸ் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாம்.

விரைவில் இந்த பாடல் சென்னையில் ஷூட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இந்த பாடலை பிரபல நடன இயக்குனரான கல்யாண் இயக்கித் தர உள்ளாராம். துணிவு படத்தின் மூலமாக முதல் முறையாக ஜிப்ரான் அஜித் படத்துக்கு இசையமைப்பாளர் ஆகியுள்ளார். ஏற்கனவே வலிமை படத்தில் பின்னணி இசை மட்டும் ஜிப்ரான் இசையமைத்துக் கொடுத்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் துணிவு படத்துக்காக ப்ரமோஷன் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அஜித்தின் மேனேஜரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா “ஒரு நல்ல திரைப்படம் அதனளவில் தானே ப்ரமோஷன் செய்துகொள்ளும் -அஜித்” என்று பகிர்ந்து அந்த தகவல்கள் பொய் என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அஜித் டப்பிங் பேசி முடித்துள்ளதாகவும் செய்திகள் வர தொடங்கியது ..

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

சமீபத்திய கதைகள்