தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்:-
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, தேனி, திருச்சி, மதுரை, தேனி.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:-
சிவகங்கை, நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை.
இந்நிலையில், வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது.
வியாழக்கிழமை, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நவம்பர் 11 ஆம் தேதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஆகிய இடங்களுக்கும் மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர்.