துனிவு ஜனவரி 11, 2023 அன்று பொங்கலின் போது பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகியோருடன் அஜித்தின் மூன்றாவது படம் இது. அதனால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்கிறது, மேலும் வெளிநாட்டு சந்தையை லைகா புரொடக்ஷன்ஸ் கையாளும்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர்.
படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த பாடல் வெளியாகிவிடும் ஏன் தெரிகிறது.
திரைக்கதையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறாராம் ஹெச்.வினோத். அதிலும் நெகட்டிவ் வேடத்தில் வரும் அஜித்துக்கு அசத்தலான காட்சிகளை அவர் எழுதி வருகிறாராம். மணி ஹீஸ்ட் வெப் சீரியஸ் போல, மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபடும் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம்.
எனவே, பில்லா, மங்காத்தா படங்களுக்கு பின் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அஜித் கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நடிகர் அஜித்குமார் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். க்ளீன் சேவ் செய்து அசத்தலான லுக்கில் இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்று மிரண்டு போயுள்ளனர்.
மேலும், அஜித்தின் அடுத்ததாக படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் ட்வீட் இதோ
And it’s a wrap for thunivu song shoot.. loved every bit of making the songs with Ajith and the entire crew.. thanks to each and everyone..hope u all love it ❤️😄#Thunivu #AjithKumar
— kalyan dance choreographer (@kayoas13) November 29, 2022
For #AK Fans..
Time to say Goodbye to November..#Thunivu updates to resume in December.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) November 30, 2022
ஒரே நாளில் இடைவெளியே இல்லாமல் ரெண்டு பாட்டு, ஆடி முடித்த அஜித் வீடியோ வைரலாகி வருகிறது இதோ
அதுமட்டும் இல்லாமல் நாளை முதல் துணிவு படத்தின் அப்டேட் ஒன் பை ஒன்னாக வெளிவரும் என சினிமா வாசிகள் குறி வருகினறார் .
துணிவு படத்தின் வெளியீட்டிற்காக அஜித்குமார் காத்திருக்கிறார். எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.