சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் மகாலட்சுமி. இதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் சீரியல் வாய்ப்பு பெற்று நடித்து வந்தார். அதன்பின் பிரபல தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் நடித்து வந்தார். பின் முக்கிய நடிகையாக பல சீரியலில் நடித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளத்தொடர்பு பிரச்சனையில் சிக்கினார். அதையெல்லாம் ஓரங்கட்டி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் சர்ச்சையான நிலையில் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள் மகாலட்சுமி ரவீந்தர். இதன்பின் தங்கள் வாழ்க்கையில் வேலையில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி, குறித்த பொருட்கள் மற்றும் ஆடை அணிகலன்களின் விளம்பரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது கிறிஸ்மஸ் காலம் என்பதால் கேக் விளம்பரங்களையும் செய்து வருகிறார். வீடு முழுக்க கேக் மற்றும் சாக்லெக்ஸ்களை வாங்கி வைத்து அதனை பிரமோட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார் மகாலட்சுமி. இந்நிலையில் ஆரம்பத்தில் மகாலட்சுமி நடிக்க ஆரம்பித்த போது எடுத்த புகைப்படங்களும் தற்போது இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.