அஜீத் நடித்துள்ள ‘துனிவு’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தற்போது ‘சில்லா சில்லா’ என்ற முதல் சிங்கிளையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் பாடிய ‘சில்லா சில்லா’ இசை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியிருக்கிறார். பாடலை வைசாக் என்பவர் எழுதியுள்ளார்.
பாடலை கேட்கையில், பாடலில் வரும் பீட் மற்றும் வரிகள் அனைத்தும் நம்மளை இதற்கு முன்பே வெளியான “ஆலுமா டோலுமா” பாடலின் நினைப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த அளவிற்கு சூப்பரான குத்து பாடலை ஜிப்ரான் அஜித்துக்காக கொடுத்துள்ளார். இது தான் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 50-வது படமும்.
வெறும் பத்து நிமிடத்தில் 200 கே லைக்குகளை பெற்ற ரஞ்சிதமே பாடல் ஆனால் சில்லா சில்லா பாடலோ 203 லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது அதுமட்டும் இல்லாமல் 10 நிமிடங்களில் ஒரு லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘சில்லா சில்லா’ பாடல்…!
மேலும், இன்று “துணிவு” படத்தின் பாடல் தான் வெளியாகியுள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் துணிவு படமே வெளியானது போல திரையரங்குகளில் டிக்கெட் எடுத்து மேளம் அடித்து நடனமாடி கொண்டாடி வருகிறார்கள். அப்போ கண்டிப்பாக படம் வெளியாகும் சமயத்தில் எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதை யோசிக்கவே முடியவில்லை. மேலும் இன்று வெளியான இந்த சில்லா சில்லா பாடல் என்ன சாதனையெல்லாம் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
துணிவு என்பது கொள்ளைகள், வங்கிகள் மற்றும் பணம் ஆகியவற்றின் கருப்பொருளைச் சுற்றியுள்ள ஒரு வணிக பொழுதுபோக்கு ஆகும், இது எச்.வினோத் எழுதி இயக்கியுள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழகத்தில் வெளியிடப்படும். துனிவு 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.