அஜீத் நடித்துள்ள ‘துனிவு’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தற்போது ‘சில்லா சில்லா’ என்ற முதல் சிங்கிளையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் பாடிய ‘சில்லா சில்லா’ இசை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ‘துணிவு’. மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதியாக சென்னையில் நடைபெற்றது. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை
அந்த வகையில் நேற்று காலை வெளியான அப்டேட்டின் படி சில்லா சில்லா பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் கொஞ்சம் தாமதமாக 6.30 மணிக்கு வெளியானது. இந்த பாடல் வரிகளை வைசாக் எழுத அஜித் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் ராக் ஸ்டார் அனிருத். ஐந்து வருடங்கள் கழித்து அஜித் குமாரின் படத்திற்காக அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் லிரிக்கல் விடியோவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் அதோடு சேர்த்து ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
“சினிமாவில் எனது பயணத்தை தொடங்கி 4088 நாட்களுக்கு பிறகே நான் இந்த அற்புதமான அனுபவத்தை உணர்கிறேன் அதும் எனது 50வது திரைப்படத்தில். அஜித் சார் மீது இருக்கும் அன்பு என் வாழக்கையிலும் பரவியுள்ளது. உங்களில் ஒருவனான நானும் இதற்கு நியாயம் செய்துள்ளேன் என நம்புகிறேன். சில்லா சில்லா இனிமேல் உங்களுடையது !!! என நெகிழ்ச்சியுடன் ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார்.
It took 4088 days since I began my film career to experience this moment in 50th film 🙏🏻
Love for #AK sir has spread into my life too.Hope i have done justice as one among you ❤️இனிமேல் #ChillaChilla உங்களுடையது🙏🏻
▶️ https://t.co/ctupQeMEJJ#Thunivu #Ghibran50 pic.twitter.com/GJ2Q23CoUb
— Ghibran (@GhibranOfficial) December 9, 2022
The #ChillaChilla fever continues to sweep the Internet by storm, with over 10 million views on YouTube in less than 24 Hours!🔥💫 https://t.co/0Z1XO91xaD#Thunivu #ChillaChilla #NoGutsNoGlory
— Boney Kapoor (@BoneyKapoor) December 10, 2022
நேற்று மாலை வெளியான சில்லா சில்லா பாடல் வெளியாகி முழுமையாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 10 மில்லியன் லைக்ஸ்களை குவித்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் அஜித் குமாரின் படத்தையும் பாடலையும் எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எச் வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ அஜித்துடன் இயக்குனரின் மூன்றாவது தொடர்ச்சியான படத்தைக் குறிக்கிறது, மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சிபி சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.