எச் வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ அஜித்துடன் இயக்குனரின் மூன்றாவது தொடர்ச்சியான படத்தைக் குறிக்கிறது, மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சிபி சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் தான் வெளியாக இருக்கிறது. ஆனால் வாரிசு படத்திலிருந்து கொடுக்கப்பட்ட அப்டேட் அளவுக்கு துணிவு படத்திலிருந்து எந்தவித அப்டேட்டும் வராமலேயே இருந்தது. இதுவே படம் பற்றிய சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் இப்போது வெளிவந்த பாடல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டது.
அந்த வகையில் நேற்று அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தப் பாட்டுக்காக நேற்று காலை முதலே சோசியல் மீடியா மிகவும் பரபரப்பாக இருந்தது. மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியான இந்த பாடல் சில நிமிடங்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.அதிலும் விஜய்யின் ரஞ்சிதமே பாடலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி இப்பாடல் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. எப்படி என்றால் ரஞ்சிதமே பாடல் வெளியான 60 நிமிடங்களில் 500k லைக்குகளை பெற்றிருந்தது. ஆனால் துணிவு முதல் பாடல் 60 நிமிடங்களில் 565k லைக்குகளை வாரி குவித்துள்ளது. அந்த வகையில் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருக்கிறார்.
இதைத்தான் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாக்கள் தெறிக்க விட்டுள்ளனர். ஏற்கனவே விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் பிரளயமே ஏற்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், அப்டேட்டுகள் வெளிவந்த போது துணிவு திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பெருமளவில் கலாய்த்து வந்தனர். தற்போது துணிவு படத்தின் இந்த சாதனை அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலுக்கு கொரியோகிராப் செய்த கல்யாண் மாஸ்டர் அந்த ரகசியத்தை கூறியுள்ளார் அதாவது சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து இருக்கும் என்று கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இன்னொரு பாடலை கல்யாண் மாஸ்டர் தான் கொரியாகிராப் செய்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அந்த பாடலையும் பட குழு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சில்லா சில்லா பாடலின் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவலை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காப்பான் படத்தில் வில்லனாக நடித்த சிராக் ஜானி துணிவு படத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ளது .. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை இவர் தான் படத்தில் வில்லனோ என குறி வருகின்றனர்
Super excited To Announce My Next film with none other then #THALA AJITH KUMAR SIR #thunivu
Thank you @ChennaiTimesTOI & @msuganth For this beautiful artical for my next film #thunivu #HVinoth@BoneyKapoor @RedGiantMovies_ @Udhaystalin @BayViewProjOffl @NetflixIndia pic.twitter.com/PuoqYx7V5n
— Chirag jani (@JaniChiragjani) December 11, 2022
It was an absolute pleasure & blessing to work with you in #thunivu #Ajith sir
And looking forward to work with you many more timeLove you #THALA ♥️@SureshChandraa #thunivu #ThunivuPongal #AjithKumar #thala #chiragjani #NoGutsNoGlory #AK61 #ChillaChilla pic.twitter.com/sV86qWQq1N
— Chirag jani (@JaniChiragjani) December 11, 2022
அஜீத் நடித்துள்ள ‘துனிவு’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தற்போது ‘சில்லா சில்லா’ என்ற முதல் சிங்கிளையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் பாடிய ‘சில்லா சில்லா’ இசை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.