‘துணிவு ’ இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளா’ படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியிடப்பட்டன, மூன்றாவது சிங்கிள் ‘கேங்க்ஸ்டா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
அதனை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை எடுத்தார் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித்தும் வினோத்தும் கைகோர்த்து துணிவு திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன. இந்த படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இருப்பினும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கிறது
அதன்படி வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி மிகப் பிரமாண்டமான முறையில் வாரிசு படத்தின் பிரமோஷன் விழா நடைபெற இருக்கிறது இதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை ஆனால் மற்றபடி இந்த படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் படத்தின் இயக்குனர் ஹச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கலந்து கொள்வார்கள் என தெரிய வருகிறது. நடிகர் அஜித் இதுவரை ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திடீரென ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
துணிவு படத்தின் ட்ரைலர் ஆனது 31 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகார்பூர்வ அறிவுப்பு இதோ
இந்நிலையில் வெளிநாட்டில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேலை படு ஜோராக துபாயில் விமானம் மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷன் ஆரம்பம் ஆகியுள்ளது இதோ உங்கள் பார்வைக்கு
#thunivu soaring high in the sky . Dubai skydiving promotions @lycaproductions #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @mynameisraahul @Gokulammovies @wcf2021 @sureshchandraa pic.twitter.com/uXdWWHcnC2
— Boney Kapoor (@BoneyKapoor) December 26, 2022
அஜித்தின் வரவிருக்கும் ஹீஸ்ட் த்ரில்லர் ‘துனிவு’ ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, படம் அஜித்தை எதிர்மறையாக சித்தரிக்கப் போகிறது. நிழல். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் உள்ளன மற்றும் படத்திற்கு ஸ்டண்ட் இயக்கியவர் சுப்ரீம் சுந்தர்.