எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் வரவிருக்கும் திரைப்படம் ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் விஜய் நடித்த ‘வரிசு’ படத்துடன் மோத உள்ள நிலையில், இரண்டு படங்களுக்கான விளம்பரங்களும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுவாரஸ்யமாக, அஜித்தின் ‘துனிவு’ தயாரிப்பாளர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தை புதுமையான முறையில் விளம்பரப்படுத்த விண்ணில் ஏறியுள்ளார்.
இதையடுத்து, எச் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக இணைந்துள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு விதமான கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பைக் ரேஸ், அடிதடி சண்டை காட்சி என படம் சும்மா மிரட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 12ந் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. அதே தேதியில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால், இரண்டு ரசிகர்களும் வாரிசா, துணிவா என் கேட்டு சண்டைப் போட்டு வருகின்றனர். படம் வெளியாகும் வரை இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருபடங்கள் இருக்கின்றன.
துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் கடந்த மாதம் 9ம் தேதி வெளியாகி இதுவரை இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து உலக அளவில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அதேபோல், 2வது பாடலான காசே தான் கடவுளடா பாடல் வெளியானது. இதையடுத்து கிறிஸ்துமஸ் அன்று கேங்ஸ்டா என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரியை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், துணிவு படத்தின் வேற லெவல் புரமோஷன் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்த படி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டுள்ளனர். ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோலிவுட் படத்திற்கு இதுபோன்ற ஒரு ப்ரோமோஷனை செய்து உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. மேலும், வரும் 31ஆம் தேதி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என்றும் லைகா அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாயாவில் துணிவு பட புரமோசன் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து, எச் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது படமான துணிவு படத்தில் விளம்பரம் செய்வதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது . இந்நிலையில் துபாயில் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா மற்றும் நியூயார்க் டைம்ஸ் Square ஆகிய இடங்களில் துணிவு பட ப்ரோமோஷன் மிக மிக பிரம்மாண்டமாக துணிவு படத்தின் ப்ரோமோஷன் நடைபெற போகிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது ..
உலகின் மிகப்பெரிய கட்டடத்தில் 'துணிவு' புரமோசன்? | Ajith | Thunivu | H Vinoth | Manju Warrier#Thunivu #Gangstaa#hvinoth #AjithKumar #gibran #Pongal2023 #ThunivuPongal #ThunivuUpdate #THUNIVU #KasethanKadavulada #boneykapoor #HVinoth #Ajithkumar𓃵 #NoGutsNoGlory pic.twitter.com/SSKH8zEezk
— Ajithkumar_Samrajyam👑 (@Ak_Samrajyam) December 27, 2022
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளையின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் இருக்கும், மேலும் அஜீத் சாம்பல் நிற நிழல்களுடன் நடிக்கிறார்.