27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஅதிரடியாக அஜித் 62 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் !! யாரும் எதிர்ப்பார்க்காத பிரமாண்ட கூட்டணி...

அதிரடியாக அஜித் 62 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் !! யாரும் எதிர்ப்பார்க்காத பிரமாண்ட கூட்டணி !

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

துனிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாடல் அறிவிப்பு போஸ்டரில் ஸ்டைலான அஜித் பளபளப்பான கருப்பு நிற உடை மற்றும் சன்கிளாஸ் அணிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கான வரிகளை ஷபீர் சுல்தான் மற்றும் விவேகா எழுதியுள்ளனர். படத்தின் முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள்கள் சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுலடா.

இதனிடையே துணிவு படத்தின் படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படமான தல 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.

விக்னேஷ் சிவனும், நயந்தாராவை திருமணம் செய்துகொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான குஷியில் தல 62 படத்தை இயக்க தற்போது வேகமாக ஆயத்தமாகியுள்ளார். இப்படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் உலா வந்து வைரலாகியுள்ளது. முதலில் இப்படத்தின் கதையை அரசியல் சம்பந்தமாக எழுதி அஜித்திடம் காண்பித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

ஆனால் அஜித்திற்கு அந்த கதையில் நடிக்க விருப்பமில்லாததால் மொத்த கதையையும் மாற்றி அமைத்து தற்போது முகவரி பட பாணியில் ஒரு பீல் குட் கதையை உருவாக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த கதையில் நடிக்க ஓகே சொல்லியுள்ள அஜித், படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி 2 வது வாரத்தில் அதாவது வரும் பொங்கல் பண்டிகை சமயத்தில் பூஜைப் போட்டு தல 62 படத்தை மும்பையில் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

பில்லா படத்திற்கு பின்பு நடிகர் அஜித் ஆக்ஷன் மற்றும் ஆன்டி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தல 62 படத்தில் சாந்தமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலிமை திரைப்படம் இந்தாண்டு ஆக்ஷன் மாஸ் படமாக வெளியானது

தற்போது துணிவு படமும் மாஸ் படம் தான் என்பதை அஜித் கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த போஸ்டரிலேயே தெரிகிறது. இந்நிலையில் ஆக்ஷன் படங்கள் இளைஞர்களை தவிர மற்ற வயது ரசிகர்களுக்கு பார்க்க உகந்ததாக இருக்காது. அந்த வகையில் காலம் காலமாக ஒரு படத்தை குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடிய படமாக தல 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 96, பேரன்பு, மொழி, அன்பேசிவம், இறுதி சுற்று போன்ற படங்களைப் போல் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காமல் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்பதே அஜித்தின் ஆசை.

பொதுவாக விக்னேஷ் சிவனின் படங்களும் சற்று ஆக்ஷன் கலந்த கமெர்சியல் திரைப்படமாகவே இருக்கும். தற்போது ஆக்ஷன் காட்சிகளே இல்லாமல் புது முயற்சியில் அஜித்தை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் புக் செய்யப்பட்ட நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் அல்லது நடிகை திரிஷா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான 62 படத்தில் கேமராமென் இணைந்துள்ள ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் .ஒளிப்பதிவாளர் – ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் (தெறி, நானும் ரவுடி தான், சர்தார்) ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்