28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஇந்த வருஷமும் நாங்க தான் !!அஜித் ரசிகர்களுக்கு கிடைக்கப் போற வெற்றி !!...

இந்த வருஷமும் நாங்க தான் !!அஜித் ரசிகர்களுக்கு கிடைக்கப் போற வெற்றி !! அஜித்தின் அசத்தல் அட்ராசிட்டி..!வர்ரே வாவ்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. எச் வினோத் திரைப்படம் நட்சத்திரம் மற்றும் இயக்குனரின் ரசிகர்களின் அனைத்து கோட்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக தெரிகிறது.போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், அமீர், பாவனி, சிபி, பிரேம், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதன் முதலாக பிங்க் படத்தை ரீமேக் செய்து தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித்.

இந்த ஆண்டு இதே கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு திரைப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பதை தற்போது வெளியாகி உள்ள வெறித்தனமான துணிவு டிரைலர் உறுதிபடுத்தி உள்ளது.

வலிமை படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த போதும் ஏற்கனவே விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் சிவாவை நம்பி விஸ்வாசம் படம் கொடுத்து வெற்றி பெற்றாரோ அதே போல இந்த முறையும் ஹெச். வினோத் மீது நம்பிக்கை வைத்து துணிவு படத்தை எடுக்க அனுமதித்துள்ள அஜித்தின் துணிவை ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை இயக்குநர் ஹெச். வினோத் சரியாக கையாண்டுள்ளதாகவே தெரிகிறது.

நெகட்டிவ் ஷேடில் நடிகர் அஜித் நடித்த படங்கள் பெருமளவில் ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த துணிவு படமும் கன்ஃபார்மா ஹிட் அடிக்கும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி இந்த முறை மிஸ் ஆகாது என்கிற ரீதியில் டிரைலரின் முதல் ஃபிரேம் முதல் கடைசி ஃபிரேம் வரை சும்மா தாறுமாறு கட்ஸ் உடன் தெறிக்கவிடுகிறது.

கேங்ஸ்டராக அஜித் வருவார் இந்த படத்தில் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அதை விட மான்ஸ்டராக அஜித் தனது நடிப்பால் காட்சிக்கு காட்சி மிரட்டி இருப்பது அஜித் ரசிகர்களை காலரை தூக்கி விட்டு கெத்துக் காட்ட வைத்துள்ளது. வரும் பொங்கல் துணிவு பொங்கல் தான் என்றே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இந்த பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்தை அஜித்தின் துணிவு படம் தூக்கி சாப்பிடுமா என்கிற கேள்விக்கு சரியான பதிலை துணிவு படத்தின் டிரைலர் கொடுத்து மிரட்டி உள்ளது. வாரிசு படத்தின் டிரைலரும் விரைவில் வெளியானால் யார் இந்த பொங்கல் வின்னர் என இப்பவே சொல்லி விடலாம் என ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

மஞ்சு வாரியர் பெண் கதாநாயகியாக நடிக்கும் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி ஷங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

துணிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. போனி கபூர் தயாரித்த, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு வினோத் மற்றும் அஜித்தின் மூன்றாவது கூட்டணியை துனிவு குறிக்கிறது. துனிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதுவரை, சில்லா சில்லா, காசேதன் கடவுலடா, மற்றும் கேங்க்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் கொண்ட டிராக்குகள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய கதைகள்