28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாபோடுறா வெடிய டபுள் மடங்கு ஆக்‌ஷன் ! தெறிக்க விட போகும் அஜித் !...

போடுறா வெடிய டபுள் மடங்கு ஆக்‌ஷன் ! தெறிக்க விட போகும் அஜித் ! மரண மாஸ் ‘ஏகே-62 ’ அப்டேட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

திறமையான இயக்குனரான மகிழ் திருமேனி, இதற்கு முன்பு தடையற தாக்க, மீகாமன், தடம், மற்றும் கழக தலைவன் போன்ற திரில்லர் படங்களை இயக்கியவர். லைகா புரொடக்ஷன்ஸ் #AK62 ஐ தயாரிக்க உள்ளது.தற்போதைய நிலவரப்படி, விக்னேஷ் சிவன் இனி AK62 இன் இயக்குநராக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் புதிய படத்தை பற்றிய அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் ஏகே 62 படத்தின் இயக்குனரை அறிவிக்க இருக்கிறது. அதாவது தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க போகிறார் கிட்டத்தட்ட 100% உறுதியாகியுள்ளது.

தற்போது லண்டன் சென்றுள்ள மகிழ்திருமேனி லைக்கா நிறுவனத்திடம் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடைசியில் சுமூக முடிவு ஏற்பட்டதால் 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனிக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க அஜித் பல விஷயங்களை பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர். அந்த வகையில் தற்போது ஏகே62 படத்தில் புதிதாக இணைந்துள்ள இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திடம் கதை கூறி சம்மதம் வாங்கியுள்ளார். இருந்தாலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வரமால் உள்ளது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தான் ஏகே62 படத்தின் அப்டேட்டை தராமல் உள்ளது என பலரும் நினைத்த நிலையில், இதற்கான காரணம் அஜித் தான் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசத்தை காண்பிக்க வேண்டி பல முயற்சிகள் எடுப்பார். உதாரணமாக உடலை குறைப்பது, அதிகரிப்பது, தனது முகம், தாடி, மீசை உள்ளிட்டவை மெருகேற்றுவது என அனைத்தும் செய்வார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே பல கண்டிஷன்களை போட்டுவிட்டு சம்மதம் வாங்கிவிட்டு தான் அப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்வார். அந்த வகையில் ஏகே 62 படத்தை இயக்க உள்ள மகிழ் திருமேனிக்கு, அஜித் புது கண்டிக்ஷன் ஒன்றை போட்டுள்ளார். இயக்குனர் மகிழ்திருமேனி இதுவரை கழகத்தலைவன், தடம், உள்ளிட்ட 5 படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

இதில் அஜித்திற்கு பிடித்த படங்கள் என்றால் அருண்விஜய் நடித்த தடம் மற்றும் தடையறத் தாக்க திரைப்படம் தான். இப்படங்களில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாத போதும் இரு படங்களும் வேற லெவல் ஹிட் எனலாம். ஆனால் அஜித்தின் படங்கள் என்றாலே ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் மகிழ்திருமேனி அஜித்திடம் சொன்ன முழு கதையில் ஆக்ஷன் காட்சிகள் கம்மியாக உள்ளதாக அஜித் தெரிவித்தாராம்.

இதனிடையே துணிவு படம் போல் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அக்ஷன் காட்சிகள் இருப்பது போல, படத்தின் கதையை மெருகேற்றுங்கள் என அஜித் மகிழ்திருமேனியிடம் கண்டிஷனுடன் தெரிவித்துள்ளாராம். அஜித்தின் இந்த கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ் திருமேனி, தற்போது இப்படத்தின் கதையை அதிக ஆக்ஷன் கலந்து மெருகேற்றி வருகிறாராம். இதன் காரணமாகத்தான் ஏகே62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாமல் உள்ளது என்பது கறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நட்சத்திர நடிகர், தனது குடும்பத்திற்காகவும் தனக்காகவும் அடிக்கடி நேரத்தை ஒதுக்குகிறார். அஜித் தனது வரவிருக்கும் படமான ‘AK62’ படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் தனது உலக பைக் சுற்றுப்பயணத்திற்கு ஒரு இடைவெளிக்கு செல்வார்.இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் ‘AK62’ படத்தை இயக்கவிருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டு அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையலாம் என்பது சமீபத்திய சலசலப்பு. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்