2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் தங்கள் வாகனத் தொடரணி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
புல்வாமாவில் இந்த நாளில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்கிறோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தைரியம் வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க எங்களைத் தூண்டுகிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். சிஆர்பிஎஃப் கான்வாய் மீது தற்கொலைப் படை தீவிரவாதி தனது வாகனத்தை மோதியதில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குறிவைத்தது.