27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாலட்சுமி மேனன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

லட்சுமி மேனன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் ‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், இந்த ஷெட்யூலில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் அறிவழகன், சப்தம் படத்தொகுப்பில் இணைந்த திறமையான மற்றும் அழகான நடிகை லட்சுமி மேனனை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ட்சுமி மேனன். அட ஆமாங்க… சமீபத்தில், இவர் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2009-ல் ஈரம் என்ற ஸ்லீப்பர் ஹிட் படத்தை வழங்கிய நடிகர் ஆதியும், இயக்குனர் அறிவழகனும் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த படத்திற்கு ‘ஈரம்’ படத்தின் ஒரு பகுதியாக இருந்த தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்