30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅஜித்திற்காக ரூட்டை மாற்றும் மகிழ் திருமேனி !! AK62 படத்தின் அசத்தலான அப்டேட் இதோ

அஜித்திற்காக ரூட்டை மாற்றும் மகிழ் திருமேனி !! AK62 படத்தின் அசத்தலான அப்டேட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏகே 62 அப்டேட் ப்ரோமோ இல்லாமல் டைட்டில் போஸ்டர் மட்டும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.இதனிடையே ஏகே 62 மேக்கிங்கில் மகிழ் திருமேனி சில மாற்றங்கள் செய்துள்ளதால் லைகாவும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி கமிட் ஆகியுள்ளார். இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் மகிழ் திருமேனி தான் இயக்குநர் என கோலிவுட் வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

அஜித் – மகிழ் திருமேனி இணையும் ஏகே 62 அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும், ப்ரோமோ வீடியோவுக்கு பதிலாக டைட்டில் போஸ்டரை மட்டும் படக்குழு வெளியிடும் எனவும் தெரிகிறது. அதேபோல் ஏகே 62 படத்திற்கு டெவில் என்ற டைட்டில் வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மகிழ் திருமேனி தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதையே விரும்புவார். அதனால் ஏகே 62 படத்துக்கு டெவில் என்ற டைட்டில் வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.

ஏகே 62 திரைப்படம் ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். அஜித்தின் சம்பளம் உட்பட மொத்தம் 220 கோடி வரை லைகா நிறுவனம் பட்ஜெட் போட்டு வைத்திருந்தது. ஆனால், ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என அஜித் ஆசைப்பட்டதால், மேக்கிங் ஸ்டைலில் சில மாற்றங்கள் செய்துள்ளாராம் மகிழ் திருமேனி. அதற்கு லைகாவும் க்ரீன் சிக்னல் கொடுத்ததோடு, பட்ஜெட்டை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக்கொள்ளலாம் என தெரிவித்துவிட்டதாம். இதனால் அஜித்தும் உற்சாமாக ஷூட்டிங் கிளம்ப ரெடியாகிவிட்டாராம்.

இதனையடுத்து விரைவில் ஏகே 62 அபிஸியல் அப்டேட் கொடுக்க படக்குழு தயார்நிலையில் இருக்கிறதாம். இந்தப் படத்தில் அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளார்களாம். மார்ச் மாதம் தொடங்கும் ஏகே 62 ஷூட்டிங் 5 முதல் 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள் ஏகே 62 படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளதாம்.

சமீபத்திய கதைகள்